மூதாட்டியிடம் 5 சவரன் செயினை பறித்தவர் கைது

0 551
Stalin trichy visit

திருச்சி, அக். 31  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பெருமாம்பட்டியைச்
சேர்ந்தவர் அம்மாகண்ணு (வயது 65) இவர் கடந்த 5 ம்தேதி தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் நாடி பிடித்துப் பார்த்து மூட்டு வலிக்கு நிவாரண மருந்து தருவதாக கூறியுள்ளார். அம்மாக்கண்ணு கையை பிடித்த போது சுயநினைவை இழந்த அவர் தான் அணிந்திருந்த 5 சவரன் செயினை மர்ம நபரிடம் கழற்றி கொடுத்துள்ளார். இதுகுறித்து புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தொட்டியம் அருகே உள்ள அரங்கூர், குடித்தெருவைச் சேர்ந்த செல்வம் (வயது 42) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 5 சவரன் செயினை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.