கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கல்

0 299
Stalin trichy visit

திருச்சி, அக். 31 முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டுரை போட்டி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கினார். திருச்சி மாவட்டம், முசிறி அரசு ஆண் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை போக்குவரத்து விபத்து குறைத்தல் அதில் பொதுமக்களின் பங்களிப்பு பற்றிய கட்டுரை போட்டி நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முசிறி காவல் கண்காணிப்பாளர் யாஸ்மின், காவல் ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பொது இடங்களில் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை காவல்துறை அதிகாரிகளிடம் மாணவிகள் எடுத்துரைத்தனர். அவற்றை கேட்ட அதிகாரிகள், தங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளித்தனர். மேலும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும், யாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற வினாவிற்கு, அதற்கான சரியான பதிலை மாணவிகள் அளித்தனர். பள்ளி தலைமையாசிரியை தீபா, உதவி தலைமை ஆசிரியை வாணிசிறீ உதவி காவல் ஆய்வாளர் கார்த்திக் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் காவலர்கள், பள்ளி மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.