துடையூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

0 226
Stalin trichy visit

 

திருச்சி, நவ.1  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி ஊராட்சியில் உள்ள துடையூரில் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பானு முருகேசன் தலைமையில் இன்று நடைபெற்றது.
துணைத் தலைவர் பாண்டீஸ்வரி மற்றும் ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.இதில்
சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தை நல குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுப்பதில் ஊராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுவின் பங்கு குறித்தும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் குறித்தும் குழந்தைகளை சட்டப்படி தத்தெடுத்தல், தற்காப்பு வளர்ப்பு திட்டம், பிற்காப்பு வளர்ப்பு திட்டம் குழந்தைகளின் கல்வியின் அவசியம் குறித்து பேசினார்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜராஜேஸ்வரி கிராம நிர்வாக அலுவலர் கிராம சுகாதார செவிலியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குழந்தைகள் மீதான வன்முறை குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது ஊராட்சி செயலாளர் காமாட்சி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.