மன அழுத்தத்தில் இருந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, நவ.2 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் மன அழுத்தத்தில் இருந்த இளம் பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மண்ணச்சநல்லூர் அருகே சிறுகம்பூர் குடித் தெருவை சேர்ந்தவர் 22 வயதான இளம் பெண் திவ்யா.இவர் தனது படிப்பை முடித்துவிட்டு திருச்சியில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் ஒரு விதமான மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.கடந்த ஒரு மாதமாக யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அல்லித்துறையில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பிய திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிறுகாம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை செய்து வருகின்றனர்.