சுகாதாரத்துறை சார்பில் நடப்போம் நலம்பெறுவோம் நடைபயிற்சி…

0 230
Stalin trichy visit

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சியில் சுகாதாரத்துறை சார்பில் நடப்போம் நலம்பெறுவோம், 8 கிலோமீட்டர் தூரம்  நடை பயிற்சியை தொடங்கி வைத்தார்..

திருச்சியில் சுகாதாரத்துறை சார்பில் நடப்போம் நலம்பெறுவோம், 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சியை திருச்சி உழவு சந்தை அண்ணாநகர் அறிவியல் பூங்காவில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்..

இந்த நிகழ்ச்சியில் மாநகர மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகர பொறியாளர் சிவபாதம், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சியில் பங்கேற்றனர்..

இந்த நடைபயிற்சியானது அண்ணா நகர் அறிவியல் பூங்காவிலிருந்து நீதிமன்ற சாலை வழியாக குழுமாயி அம்மன் கோவில் வரை சென்று நிறைவடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.