இயற்கை வேளாண்மை குறித்து கண்டுணர் சுற்றுலா
தத்தமங்கலத்தில் விவசாயிகளுக்கு PKVY – பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்து கண்டுணர் சுற்றுலா நடைபெற்றது.
திருச்சி, டிச. 1 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தத்தமங்கலம் கிராமத்தில் அங்கக விவசாயி சேவியர் அவர்களின் வயலில் விவசாயிகளுக்கு PKVY – பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்து கண்டுணர் சுற்றுலா நடைபெற்றது.
இதில் வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர் திருச்சி, டிச. 1 இந்த நிகழ்ச்சியில் சேவியர் பாரம்பரிய நெல் தங்க சம்பா சாகுபடி குறித்தும் அங்கக வேளாண்மையில் தனது அனுபவங்களை விளக்கி கூறினார்.
மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி திட்ட விளக்கவுரை ஆற்றினார்.
இயற்கை வேளாண்மையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அங்கக சான்றளிப்பு குறித்தும் அங்கக சான்றளிப்பு ஆய்வாளர் சபாபதி உரை ஆற்றினார்.
மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் நன்றி கூறினார்.