மணப்பாறையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பிறந்தநாள் விழா
திருச்சி, டிச. 2 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகர திமுகவின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேருந்து நிலையம் முன்பு நகர செயலாளர் மு.ம.செல்வம் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதேபோல் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சுற்றுச்சூழல் அணி சார்பில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வக்கீல் பி.எல்.கிருஷ்ணகோபால் தலைமையில் பேருந்து நிலையம் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் தி.மு.கவினர் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.