புனித சிலுவை கல்லூரியில் எய்ட்ஸ் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் 

0 256
Stalin trichy visit

திருச்சி, டிச. 2 புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில்   உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு  நிகழ்ச்சி  நாட்டு நலப்பணித்திட்டத்தால் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி கல்லூரியின் முதல்வர் முனைவர் அருள்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி  தலைமையில், கல்லூரியின் செயலர் முனைவர் அருள்சகோதரி ஆனி சேவியர் அவர்களின் முன்னிலையில்  நடைபெற்றது,

இந்நிகழ்ச்சியில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் நேரு  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு எய்ட்ஸ் தொற்று பரவும் முறையையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முறைகள் குறித்தும்  வாழ்க்கை என்றும் கூறினார்.

மேலும் மாவட்ட மேற்பார்வையாளர் புஷ்பலதா  கலந்து கொண்டு இரத்த வங்கிகள் மூலமாக இரத்ததானம் வழங்கும் முறையையும், எய்ட்ஸ் பரவும் முறையையும் அதைத் தடுக்கும் முறையையும் மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்.

புதிய வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு இரத்ததானம் வழங்குவோர் சங்கத்தில் இருந்து  பிளட்ஷாம்  கலந்து கொண்டு மனிதநேயம் குறித்து  உரையாற்றினார்.

திருச்சி ஒருங்கிணைந்த ஆலோசனை மையத்திலிருந்து  ஆர்.எம். மகேஸ்வரி கலந்து கொண்டு உரையாற்றினார்.  திருச்சி சமூக சேவகி  மகேஸ்வரி சிறப்புச் செய்தார்

இந்நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி. மெர்லின் கோகிலா அவர்களால் ஏற்பாடு செய்திருந்தார்.. நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் கு. டாலி ஆரோக்கியமேரி மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவிகளுடன் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.