திமுக விவசாய அணி மாவட்ட , மாநகர அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

0 339
Stalin trichy visit

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக விவசாய அணி மாவட்ட மற்றும் மாநகர அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகர,மாநகர, பேரூர் கழக விவசாய அணியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேலத்தில் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது மாநில மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

இந்த மாநாடு நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணியினர் சிறப்பாக செயல்பட்டு வருவதோடு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக விவசாய அணி சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள விவசாய அணியை சேர்ந்தவர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென எனவும், மாநாடு கூட்டத்திற்கு வருகை தரும் விவசாய அணியை சேர்ந்த அனைவரும் பச்சைத்துண்டை கட்டாயம் அணிந்து வர வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

Leave A Reply

Your email address will not be published.