CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் பட்டினி போராட்டம்

0 264
Stalin trichy visit

திருச்சி, டிச. 2  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் குடும்பத்தோடு பட்டினி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்யப்படும் என திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தனர். ஆனால் இந்நாள் வரை இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனை கண்டித்தும் இதனால் ஊழியர்கள் ,ஆசிரியர் . மற்றும் பொதுத்துறை நிறுவன தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவதாகவும் இதனால் பழைய ஓய்வுதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் , CPS திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜேஸ்வரன் தலைமை வகித்தார் இதில் ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Leave A Reply

Your email address will not be published.