கடும் பனி மூட்டத்தால் வாகனயொட்டிகள் அவதி

0 259
Stalin trichy visit

திருச்சி, டிச. 7  திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகின்றது. இந்நிலையில் நள்ளிரவு முதல் பனியின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இருப்பினும் இன்று அதிகாலை முதல் கடும் மூடும் பனியாக எங்கும் திரும்பினும் காணப்பட்டது. அருகில் செல்பவர்கள் கூட தெரியாத அளவில் பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மணப்பாறை நகரப் பகுதி மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் சென்ற வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டுக் கொண்டே சென்றனர். 7 மணியை கடந்தும் கூட பனியின் தாக்கம் அதிக அளவில் இருந்ததால் குளிரால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.

Leave A Reply

Your email address will not be published.