உரமூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
திருச்சி, டிச. 7 தூத்துக்குடியில் இருந்து கடலூருக்கு சுமார் 500 மூட்டை உரம் ஏற்றிச் சென்ற லாரி திருச்சி சஞ்சீவி நகரில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது.
சாலையில் சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தின் மீது மோதி உரம் மூட்டைகளுடன் கால்வாயில் கவிழ்ந்தது.
லாரி மோதியதில் பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்களுடன் உரம் முட்டைகள் 20 அடி பள்ளத்தில் சரிந்தன.
பள்ளத்தில் உரம் மூட்டைகளுக்கு இடையே சிக்கிய வரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு தொடர்ந்து மூட்டைகளை எடுத்து வருகின்றனர்.
லாரி ஓட்டுநர் அர்ஜுன் என்பவரை கைது செய்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.