மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் வர்ணஜால காட்சிகள்

0 460
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பஞ்சப்பூர் பேருந்து நிலையம், பஞ்சப்பூரிலேயே தனியார் பேருந்து நிலையம், கனரக வாகன நிறுத்துமிடம் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுமட்டுமல்லாமல் திருச்சி அழகாக்கும் முயற்சியில் மாநகராட்சி இறங்கி உள்ளதால் பூங்காக்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது திருச்சிக்கு முக்கிய அடையாளமாக விளங்கும் திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் தியேட்டர்கள் அமைக்கும் பணியை திருச்சி மாநகராட்சி செய்து வருகிறது. ஒலி – ஒளியுடன் கூடிய நீர்திரையில் வர்ணஜால காட்சிகள் தமிழகத்திலேயே முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இந்த தியேட்டரில் இசைகளை கேட்க தனியாக ஹெட்போன்கள் வழங்கப்படும். ஆனால் கட்டணம் விவரம் போன்றவை எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த தியேட்டரானது 2 காட்சிகளை கொண்டதாக இருக்கும் எனவும், இரவு 7 மணி முதல் 8.30 வரை இருக்கும் எனவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தியேட்டர் சோதனை முறையில் மட்டும் இயக்கப்பட்டுள்ளது. இந்த தியேட்டரானது மக்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் திருச்சி மாவட்டத்திற்கு புதிய அடையாளத்தை இந்த தியேட்டரானது கொண்டு வரும்

Leave A Reply

Your email address will not be published.