மணப்பாறை தொழிற்பேட்டையில் தனியார் ஸ்டீல் நிறுவன நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் மறியல் போராட்டம்
திருச்சி, நவ.3 மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஸ்டீல் நிறுவன நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் ஜமீல் (zamel) என்ற தனியார் ஸ்டீல் கம்பெனி உள்ளது. இந்த நிறுவனத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் தமிழக தொழிலாளர்கள் மட்டுமின்றி வட மாநில தொழிலாளர்களும் அதிகளவில் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் நிறுவனத்தில் நடந்த விபத்தில் வட மாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த தொழிலாளருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தொழிலாளர்களை கம்பெனி நிர்வாகம் வேலையை விட்டு நீக்குவதாக கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் இன்று பணியை புறக்கணித்து சுமார் 200 க்கும் மேற்பட்டோர் சிப்காட் நுழைவாயில் முன்பு திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இன்மையால் இதுவரை மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர். பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், இன்சூரன்ஸ், இஎஸ்ஐ, பி.எப்., போன்ற தொழிலாளர் நலன் சார்ந்த வற்றை நிறுவனம் செய்து தரவில்லை எனவும் மேலும் பணி பளு, அதிக நேர வேலை என நிர்வாகம் தொழிலாளர்களை நிர்பந்தம் செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகிவருவதாகவும் குற்றச்சாட்டும் தொழிலாளர்கள், எங்களின் நியாயமான கோரிக்கையை கூட நிர்வாகம் செவி கொடுத்து கேட்பதில்லை எனவும் கூறினர். தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகள், இன்சூரன்ஸ், இஎஸ்ஐ, பிஎஃப் போன்றவற்றை செய்து தர வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தகவல் அறிந்து வந்த மணப்பாறை காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்த போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும் பணிக்கு செல்லாமல் சிப்காட் நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் நிறுவன தொழிலாளர்களின் திடீர் மறியல் போராட்டத்தால் சிப்காட் பகுதியில் ஏற்பட்டது.