உறையூர் மீன் மார்கெட்டில் மேயா் மேயா்ஆய்வு

0 273
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உறையூர் காசி விலங்கி மீன் மார்கெட்டில்  மேயா் மு. அன்பழகன் ,சுகாதார பணிகள் குறித்து நேரில் மேயா்  ஆய்வுசெய்தார்.

ஆய்வின் போது பொது மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுத்தும் வகையில் மீன் கழிவுகளை சாலை மற்றும் ஆற்றங்கரை வெளிப்பகுதியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேயர் தெரிவித்தார்கள்.

மீன் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முழுமையாக அடைக்கப்பட்டு, கழிவுநீா்கள் தேங்கி நிற்பதையும் உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார்கள். மேலும், மீன் மார்கெட்டை தினமும் தூய்மை செய்ய வேண்டும் என்றும் அதோடு மாநகராட்சி குறிப்பிட்டுள்ள எல்லைக்குள் மீன் கடைகள் செயல்பட வேண்டும் என்றும், வெளிப்புறங்களில் மீன் கடைகள் போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் கடைகாரா்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் மீன் கழிவுகளை வெளிப்புறத்தில் சாலையிலே ஆற்றங்கரை ஓரத்திலே கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  மேயர் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின் போது மண்டலத் தலைவர்  விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் வெங்கட்ராமன்,உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்,சுகாதார அலுவலர், சுகாதாரஆய்வாளர் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.