வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பை மீட்ட தீயணைப்புத்துறையினர்

0 279
Stalin trichy visit

திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள மாத்தூர் விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் தவசி. இவரது வீட்டில் இன்று மாலை 7 அடி நீளம் உள்ள மஞ்சள் சாரை பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. இதனைக் கண்ட குடும்பத்தினர் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியேறினார். இதை எடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நவல்பட்டு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பு பிடிக்கும் இடுக்கி கொண்டு பாம்பு பிடிக்க முற்பட்டனர். அப்போது அந்த பாம்பு வீட்டில் இருந்த மீன் வலையில் சிக்கிக் கொண்டது. இதை அடுத்து அந்த சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாதுகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Leave A Reply

Your email address will not be published.