ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு ஆய்வு பணி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்குறிச்சி கிராமம் ஆவாரங்காடு எனும் இடத்தில் வருகின்ற 17.01.2024 ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
இந்நிலையில் அந்த இடத்தை இன்று (08.01.2024) ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர்,மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர்,கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்,பொதுப்பணித்துறை அலுவலர்,மருங்காபுரி வட்டாட்சியர்,துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.