அண்ணாமலையின் புதிய இயக்கத்தால் பாஜகவுக்கு பாதிப்பில்லை: பாஜக பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் பேட்டி

0 13
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 8  அண்ணாமலையின் புதிய இயக்கத்தால் பாஜகவுக்கு பின்னடைவோ, கட்சிக்கான வீழ்ச்சியாகவோ நாங்கள் பார்க்கவில்லை.  பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்தியது ஸ்டாலின்தான் அந்த நன்றி உணர்வு கூட காங்கிரசுக்கு இல்லை – பாஜக பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் பேட்டி

திருச்சியில் பாஜக மைய கூட்டம் மற்றும் பாஜக மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது

பாஜக மைய குழு கூட்டம் முடிவடைந்த நிலையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்….

அதில், நீண்ட நாளைய பிரதமர் என்ற சாதனையை ஜவர்கலால்நேரு என்பதனை பிரதமர் மோடி முறியடித்துவிட்டார், ஜூன் 21 சர்வதேச யோகாதினம் சர்வதேச யோகா தினத்தை அனுசரிப்பது பொது இடங்களில் கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது

மண்டல அளவான பயிற்சி முகாமில் நடத்துவது குறித்தும் திட்டமிடல் மற்றும் எதிர்காலத்தில் கட்சி செய்யக்கூடிய வேலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது எனவும்,

அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கியது குறித்த கேள்விக்கு?

அண்ணாமலை அவர்கள் கட்சியை விட்டு வெளியேறிய பிறகு அது முடிந்துபோன விஷயம், அண்ணாமலை தற்போது இயக்கமாக ஆரம்பித்துள்ளார். அது கட்சியாக மாறிய பிறகு பிரிந்து போனவர்கள் திரும்பி வருவார்கள் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டு அரசியலுக்கு இதனால் பெரும் பாதிப்பு இல்லை, தமிழ்நாட்டில் அகில இந்திய அளவிலும் இதனால் பெரும் பாதிப்புஏற்படாது. அண்டை மாநிலங்களில் கூட கல்யாண் சிங், உமா பாரதி உள்ளிட்ட பலர் வெளியேறி பின்னர் மீண்டும் பாஜகவில் இணைந்தது வரலாறு, இது பின்னடைவோ, கட்சிக்கான வீழ்ச்சியோ நாங்கள் பார்க்கவில்லை…

காங்கிரசை உடைத்து விட்டு வெளியேறியவர்கள் தலைவர்களாகவும் முதல்வராகவும் பிரதமராகவும் உருவானார்கள் ஆனால் பாஜகவை விட்டு வெளியேறியவர்கள் மன சமாதானம் அடைந்து மீண்டும் பாஜகவில் தான் இணைந்துள்ளனர் என்பது வரலாறு…

பாராளுமன்றத்தில் பாஜக 23 இடங்களில் போட்டியிட்டது… தற்போது 27 இடங்களில் போட்டியிட்டது வாக்கு சதவீதம் குறைந்துவிட்டது என கூறுவது தவறு…

தமிழக அரசியலில் பங்காளி பகையாளர் போல செயல்படுவார்கள் ஆனால் டெல்லி அரசியல் வேறு நட்புறவாக இருப்பார்கள், எல்லா கட்சிகளும் கூட நல்ல உறவில் பாஜக உள்ளது.

காங்கிரஸ் போன்ற துரோகம் செய்யும் கட்சி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக பங்கேற்றால் திமுக தொண்டன் கூட ஏற்றுக்கொள்ள மாட்டான், தனியாக போட்டுவிட்டால் இடதுசாரிகள் மற்றும் விசிக காங்கிரஸ் கூட ஒரு இடத்திலும் வெற்றி பெற்று இருக்காது, திமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு வேறு கூட்டணியில் இடம் பெற்றால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனவும், பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்தியது ஸ்டாலின் தான் அந்த நன்றி உணர்வு கூட காங்கிரசுக்கு இல்லை. காங்கிரஸ் துரோகம் செய்த கட்சி பாஜக தியாகம் செய்த கட்சி எனவும் தெரிவித்த அவர்,

புதிய தமிழக அரசின் ஆட்சி குறித்து கேள்விக்கு…

தமிழக எம்எல்ஏக்களுக்கு எதுவும் தெரியவில்லை அமைச்சர்களுக்கு அனுபவம் இல்லை முதலமைச்சருக்கு நிர்வாக திறன் இல்லை, தேர்தல் அறிக்கையை பேசாமல், வெள்ளை அறிக்கை பற்றி பேசுகிறார் முதல்வர், அறிவித்த திட்டங்கள் எப்போது நிறைவேற்ற போறார் என்பது தெரியவில்லை.

சட்டம் ஒழுங்கு முன்னேற்றம் இல்லை குற்ற செயல்கள் குறையவில்லை போதை கலாச்சாரம் குறைந்த பாடு இல்லை, திமுக ஆட்சியை விட முன்னேற்றம் பெண்கள் பாதுகாப்பில் முன்னேற்றம் அடைய வில்லை, விஜய் அரசு தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது விஜெய் என்பது பெயரில் தான் வெற்றி இருக்கிறது தவிர அவர் ஆட்சியில் வெற்றி இல்லை

அதிமுக கட்சியின் தற்போதைய நிலை குறித்த கேள்விக்கு…

அதிமுக உள்விவகாரங்களில் பாஜக பேசுவது இல்லை, உள் விவகாரங்களை சரி செய்யும் திறமை எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது.

அண்ணாமலை ஆரம்பித்தது ஒரு இயக்கம்தான், பாஜகவில் இருந்து வெளியேறி அந்த இயக்கத்தில் இணைந்தவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம், விஜய்யை ஜெயிக்க வைத்தது அமித்ஷாதான் காரணம், அண்ணாமலை தனியாக கட்சி ஆரம்பித்ததும் மோடி அமிதாவின் திட்டம் தான், அதுபோல மழைவராததற்கு காரணமும் மேடி -அமித்ஷாதான் காரணம், இதுபோன்று எல்லாம் ஒரு மனநோய் தமிழக அரசியலில் மோடிபோபியா செயல்பட்டுவருகிறது எனவும் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.