பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0 325
Stalin trichy visit

திருச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக சார்பில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டிப்புத்தூர் பகுதியில் 57-வது வட்ட திமுக மாவட்ட துணைச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான முத்து செல்வம் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் இன்று நடைபெற்றது..

இதில் கலந்து கொண்ட கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான கே. என். அருண் நேரு சமார் 5000 பேருக்கு வேஷ்டி, சட்டை, சேலை,கரும்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..

இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் துர்கா தேவி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா, மாவட்ட துணைச் செயலாளர் விஜய ஜெயராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

Leave A Reply

Your email address will not be published.