த.வெ.க அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, அக்.29 திருச்சி துவாக்குடி வாழவந்தான் கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தவெக அரசு தேர்தல் வாக்குறுதி படி கூட்டுறவு சங்க பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்
தொடங்கியுள்ள சாகுபடி பணிகளுக்கு நிபந்தனை இன்றி புதிய பயிர் கடனை வழங்க வேண்டும்
உயர்த்தப்பட்டுள்ள உரம் மற்றும் விவசாய இடுபொருள்களின் விலைகளை வாபஸ் பெற வேண்டும் எல் நினோ பாதிப்பு மற்றும் வெப்ப ஏற்பாடுகளால் ஏற்படும் வேளாண்மை வருமான பாதிப்புக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வாழவந்தான் கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.