வாக்காளர் விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜன.24 திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா அருகில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் (தேர்தல்)நேர்முக உதவியாளர் சீனிவாசன், கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, தேசிய மாணவர் படை கேப்டன் ஆரோக்கிய சகாயராஜ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கல்பனாதேவி, பாலமுருகன், இராமலிங்கம், பாலமுருகன், செஞ்சுருள் சங்கம். ஜான் சேவியர், ரோட்ராட் கிளப் முகமது அப்துல்லா
நூலகர் பார்த்தசாரதி, பொதுப்பணித்துறை பொறுப்பாளர் ரமேஸ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குணசேகரன், .யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர்
மற்றும் அனைத்து துறைப் பேராசிரியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் 700 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதகையை ஏந்தி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்