ஓடும் பேருந்தில் பயணியிடம் நகை திருட்டு

0 246
Stalin trichy visit

திருச்சி, ஜன.25 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பெருமாள் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா இவர் தனது மகளுடன் மணச்சநல்லூர் அருகே உள்ள மணியம் பட்டியில் தனது தாயை காண்பதற்காக  பெருமாள் பாளையத்திலிருந்து துறையூர் வந்துள்ளார். மீண்டும் மணியம்பட்டி செல்வதற்காக திருச்சி செல்லும் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார் பேருந்து பகளவாடி செல்லும் பொழுது அவர் கழுத்தில் இருந்த நகையை பார்த்தபோது காணாமல் போனது தெரியவந்தது இது தொடர்ந்து பயணியின் நகை பறிபோனது உணர்ந்த ஓட்டுநர்  சித்ராவை புலிவலம் காவல் நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளார் புலிவலம் காவல் நிலையத்தில் நகை திருட்டு குறித்து சித்ரா புகார் அளித்துள்ளார். இதுகுறித்து புலிவலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

இதேபோல் துறையூர் பேருந்து நிலையத்தில் அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் அச்சம்மடைகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.