முசிறியில் செழிப்பு இயற்கை உரம் விற்பனை மையம் திறப்பு
திருச்சி, ஜன.25 திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. முசிறி நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் நுண்ணூட்டக்கூடங்கள் மூலம் இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. தரமான இயற்கை உரத்தை நுகர்வோருக்கு அளிக்கும் வகையில் உரத்தின் தலை மணி மற்றும் சாம்பல் சத்து பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு பகுப்பாய்வு செய்யப்பட்ட இயற்கை உரத்தினை செழிப்பு என்ற பெயரில் தரம் நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த உரம் பயன்படுத்தும்போது மண்ணில் காற்றோட்டம் மற்றும் நீரை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை மேம்படுத்தப்படுவதோடு மண்ணில் இடப்படும் ரசாயனபுரத்திலிருந்து சத்துக்களை விடுவிக்கும் தன்மை மற்றும் அதனைப் பயிர் ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டுள்ளது. இந்த உரம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனை மய்யத்தினை நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் கிருஷ்ணவேணி, பொறியாளர் சம்பத்குமார், சுகாதார ஆய்வாளர் அருண்குமார் மேற்பார்வையில் விற்பனை மையம் அமைக்கப்பட்டு செழிப்பு உரம் விற்கப்படுகிறது.