பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ‘நாளும் கற்போம்’ நிகழ்ச்சி

0 461
Stalin trichy visit

திருச்சி, ஜன.25 திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கான உத்தியோக உரையாடல் மற்றும் நம்பிக்கை பை  வழங்கும் விழா “நாளும் கற்போம்” என்ற தலைப்பில் முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  திமுக வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் காடுவெட்டி கே.டி. அகதீஸ்வரன் வரவேற்றார். கொங்குநாடு பொறியியல் கல்லூரி சேர்மன் பி.எஸ். கே.பெரியசாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விஜய் டிவி புகழ் நீயா நானா கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உத்வேக உரையாடல் மற்றும் நம்பிக்கை பை வழங்கி பேசியதாவது ..
உலக நாடுகள் இந்தியாவை மதிக்க இந்திய இளைஞர்களின் சக்தியை காரணம்,
கடந்த 20- வருடத்தில் தான் மாணவர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வந்துள்ளது மூளையை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள் அதுவே உங்களது வெற்றிக்கு வழிவகுக்கும் என நம்பிக்கையூட்டி பேசினார். முடிவில் வானொலி தொகுப்பாளர் ஆர்.ஜே.சந்தோஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி  நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் முசிறி சட்டமன்ற தொகுதியில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 11, 12, ஆம் வகுப்பு படிக்கும் நான்காயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு தேர்வு எழுத தேவையான அட்டை முக்கியமான மாதிரி கேள்வித்தாள் அடங்கிய க்யூ ஆர் கோடு மற்றும் எழுதுப் பொருட்கள் அடங்கிய நம்பிக்கை பை வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் கொங்குநாடு கல்வி நிறுவன அலுவலர்கள் ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.