சௌடாம்பிகா சி.பி.எஸ்.சி. பள்ளியில் உலக சாதனை நிகழ்ச்சி
திருச்சி, ஜன.26 திருச்சி மாவட்டம், முசிறி அருகே குடியரசு தின விழாவை முன்னிட்டு தொட்டியம் சௌடாம்பிகா சிபிஎஸ்சி பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் தங்களது தனித்திறனை ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தி உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் சௌடாம்பிகா கல்வி குழுமத்தில் வளாகத்தில் சடாம்பிகா கல்வி குழுமம் மற்றும் தேனுகா நுண்கலை மற்றும் இசைக்கல்லூரி இணைந்து ஆயிரம் மாணவர்கள் பங்கு பெறும் உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு குளித்தலை தேனுகா நூண் கலை மற்றும் இசைக்கல்லூரியின் நிறுவனர் தேன்மொழி தேவன் தலைமை வகித்தார். குளித்தலை தமிழ் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
விருக்ஷா உலக சாதனையாளர் அமைப்பின் தமிழ்நாடு நடுவர் பிரபாகரன் முன்னிலையில் ஆயிரம் மாணவ மாணவிகள் சேர்ந்து கீபோர்டு வாசித்தல், பரதநாட்டியம், காவடி ஆட்டம், சிலம்பம், கிராமிய நடனம், ஓவியம், அந்தர போராட்ட வீரர்கள் போன்று மாற்றுடை அணிந்து காட்சியளித்தல் உள்ளிட்ட பல்வேறு தனித்திறனை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தினர்.
முன்னதாக சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் தலைவர் ராமமூர்த்தி, விஜய் டிவி புகழ் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இறுதியில் விருட்ச உலக சாதனை அமைப்பின் தலைமை நடுவர் ரங்கநாயகி நன்றி கூறினார்.