மணப்பாறை சார்பு நீதிமன்றத்தில் குடியரசு தினவிழா
திருச்சி, ஜன.26 இந்தியாவின் 7 5 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நமது மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மணப்பாறை சார்பு நீதிபதி சகிலா கொடியேற்றி விழாவினை சிறப்பித்தார்கள். கொடியேற்று விழாவில் மணப்பாறை உரிமையியல் நீதிபதி பாண்டி, குற்றவியல் நீதிபதி கோமதி மற்றும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன்தாஸ் செயலாளர் மகேந்திரன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.