பொன்மலை ரயில்வே பணிமனையில் நடைபெற்ற குடியரசு தினவிழா

0 250
Stalin trichy visit

திருச்சி, ஜன.27 திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இந்திய நாட்டின் 75-ஆவது குடியரசு தினத்தை தலைமைப் பணிமனை மேலாளர் சந்தோஷ் குமார் பாட்ரோ தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலர்கள், பாரத சாரண-சாரணியர் மற்றும் ரயில்வே பள்ளி சாரண சாரணியர்கள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் தலைமைப் பணிமனை மேலாளர் சந்தோஷ் குமார் பாட்ரோ பேசுகையில், நடப்பு நிதியாண்டு 2023- 24-ல் 31.12.2023 வரையில் இடைவிடாது மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக, பல்வேறு துறைகளில் அடைந்த சாதனைகளை எடுத்துரைத்தார். மேலும் நடப்பாண்டில் மண்டல அளவிலும், தேசிய அளவிலும் அதிகமான கேடயங்களைப் பெறுவதற்கு துணையாக நின்ற அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்த குழுவின் இடைவிடாத முயற்சியினை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
இந்தப் பணிமனையின் உற்பத்தித்திறன், நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பணியாளர் நலன் முதலானவற்றில் தொழிலாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆற்றிய சிறப்பான முயற்சிகளை வெகுவாகப் பாராட்டிய தலைமைப் பணிமனை மேலாளர், 141 தொழிலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு தனி சிறப்பு விருதுகளும், மேலும் 74 தொழிலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் அடங்கிய 8 குழு விருதுகளையும் வழங்கினார்.
தொடர்ந்து பொன்மலை ரயில்வே உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பண்டகத்துறை, கணக்கியல் துறை மற்றும் பொன்மலை மாவட்ட பார்த சாரண சாரணியர் ஆகியோர் இணைந்து கலாச்சார நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.
குடியரசுதினத்தை முன்னிட்டுவிழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மற்றும் விருது பெற்றவர்கள் தலைமைப் பணிமனை மேலாளர் முன்னிலையில் 100 மரக் கன்றுகள் நடப்பட்டன.
விழா ஏற்பாடுகளை பணிமனைப் பணியாளர்கள், சூப்பர்வைசர்கள், அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.