மணப்பாறையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

0 211
Stalin trichy visit

திருச்சி, ஜன.29  திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு மணவை மாரத்தான் 2024 என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. 21,10,5,3 கிலோ மீட்டர் என ஒவ்வொரு பிரிவாக நடைபெற்றது. ஆண் மற்றும் பெண்களுக்கு என தனித் தனியே நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதில் 3 வயது முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு பிரிவாகவும், 9 வயது முதல் 13 வயது, 15 முதல் 17 வயது வரையும், அதற்கு மேற்பட்ட வயதுடையோர் தனியாக என ஒவ்வொரு பிரிவாக போட்டிகள் நடைபெற்றது. இதில் மழலைகளுக்கு நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டத்தில் மழலைகள் போட்டி போட்டு அசத்தியது தான் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இதுமட்டுமின்றி 21 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் விருதுநகரைச் சேர்ந்த பாண்டியராஜன், 10 கிலோ மீட்டர் பெண்கள் பிரிவில் புதுக்கோட்டையை சேர்ந்த லாவண்யா ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.