சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வரவேற்பு
திருச்சி, ஜன.29 திருச்சி மாவட்ட யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிலம்பு பயிற்சி கடந்த நான்கு வருடமாக நடத்தி வருகின்றனர். திருச்சியில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகளிலும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்கள், விருதுகள் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் இரண்டு மாணவர்கள் முதலிடம் பிடித்தார்கள். அதன் அடிப்படையில் தாய்லாந்தில் ஜனவரி 26, 27 இரண்டு நாட்கள் உலக அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் அய்ந்து நாடுகளை சேர்ந்த இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில், ஒற்றைக் கம்பம், இரட்டைக் கம்பம், சண்டை பயிற்சி, போன்ற சிலம்பப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். முகமது இர்பான், முகமது சல்மான், முகமது ஹர்ஷத், ஆகிய மாணவர்கள் உலகளாவிய சிலம்ப போட்டியில் முதலிடம் பிடித்து விருதுகளை பதக்கங்களையும் பெற்றுள்ளனர். இதனை அடுத்து நேற்று திருச்சி ரயில்வே நிலையம் வந்த மூன்று மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.