கருங்குளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
திருச்சி, ஜன. 29 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளத்தில் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு இந்த இஞஞாசியர் ஆலய முன்பு நேற்று (ஜன.28) கா ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.
அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில
மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது. இதே போல் சில
காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வாருங்கள் பார்ப்போம்… என்று
கூறுவது போல் நின்று அருகில் வந்த காளையர்களை விரட்டியத்து பந்தாடியது. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அனைத்து வெற்றி வானை சூடினர். இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில், டிரஸ்சிங் டேபிள்,
சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயம், உள்ளிட்ட பல்வேறு பொருட்களும்,
பரிசாக வழங்கப்பட்டது.
காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.போட்டியில 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.