நெகிழி பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் : அமைச்சர் பேச்சு

0 232
Stalin trichy visit

இயற்கையை பாதுகாப்பது தான் நமக்கான பாதுகாப்பு என்பதை உணர வேண்டும்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் தி.மு.க திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர சுற்றுச்சூழல் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,
நெகிழி பயன்பாட்டை மக்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது இந்த நெகிழி பைகளால் தண்ணீர் செல்வதும் தடை பட்டிருந்ததை அனைவரும் அறிவோம். இந்த நெகிழி பயன்பாட்டை அழித்திடத் தான் தமிழக முதல்வர் மஞ்சள் பை திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்றார். தொடர்ந்து பேசிய அவர் இயற்கையை பாதுகாப்பது தான் நமக்கான பாதுகாப்பு, இதனால் தான் 27 சதவிகிதத்தில் இருந்த வனப்பரப்பை 33 சதவிகிதமாக மாற்றிட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இதே போல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஈரோடு மகேஷ் பேசும் போது,
இங்கு அரசியல் இல்லாத இடமே கிடையாது. தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் மாணவ – மாணவிகள் கலைஞரின் வாழ்வில் இருந்து ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். அது என்னவென்றால் எதற்குமே பயப்பட கூடாது, எதற்கும் அஞ்சக்கூடாது என்று கூறினார்.
முன்னதாக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழியை ஒரே நிறத்திலான மழலைகள் வரவேற்று பூங்கொடுத்து கொடுத்ததை பார்த்து வியந்த அமைச்சர் அதை அனைத்தையும் பெற்று கொண்டு நன்றியை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.