வயதான தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை
திருச்சி, பிப்.14 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் குடியிருந்த வயதான தம்பதியை நேற்று அதிகாலை (பிப்.13) 2.30 மணி அளவில் மர்ம நபர்கள் தாக்கி பணம், நகையை கொள்ளையடித்துச் சென்றனர். கல்லக்குடி போலீசார் விசாரணை.
புள்ளம்பாடி அருகே ஒரத்தூர் கிராமத்தில் உள்ள வடக்குப்பட்டி தோட்டத்தில் வசிப்பவர் கணேசன் (72). இவரது மனைவி தைலம்மை (65).விவசாயியான கணேசன்,தைலம்மை தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதில் இரண்டு மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.ஒருவர் உள்ளூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் கணேசன்,தைலம்மை்இருவரும் வீட்டிற்கு் வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வயதான தம்பதியினரை தாக்கி கட்டி போட்டுவிட்டு வீட்டில் இருந்த 3 பவுன் நகை ரூ 15,000 பணம் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதில் காயமடைந்த தம்பதியினர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு போனது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.