விஜயதசமியை முன்னிட்டு திருச்சியில் “அஸ்லா ஆர்ட் ஸ்டுடியோ” திறப்பு விழா

0 16
Stalin trichy visit

திருச்சி,அக்.23 விஜயதசமியை முன்னிட்டு திருச்சியில் “அஸ்லா ஆர்ட் ஸ்டுடியோ” திறப்பு விழா இன்று நடைபெற்றது:-

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு திருச்சி சாலை ரோடு கண்ணப்பா ஓட்டல் அருகே அஸ்லா ஆர்ட் ஸ்டுடியோ என்ற பெயரில் ஓவியக்கலை, இசை மற்றும் நடன பிரியர்களுக்கான நடனம் மற்றும் இசை பயிற்சி பள்ளி ஸ்டுடியோ திறப்பு விழா இன்று நடைபெற்றது.

முன்னதாக விஜயதசமி நன்னாளில் ஸ்டுடியோவில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் வளர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வருகை தந்த மாணவ மாணவிகளுக்கு அஸ்லா ஆர்ட் ஸ்டுடியோ உரிமையாளர் மதுபாலா அஸ்வத் குரு வணக்கத்துடன் பரதநாட்டிய நடன பயிற்சியை துவங்கினார்.

இந்த அஸ்லா ஆர்ட் ஸ்டுடியோவில் நடனம் மற்றும் இசைக் கலைஞர்களுக்கான பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், ஆர்ட் கிளாஸ், வால் பெயிண்டிங் உள்ளிட்டவைகளை பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ஸ்டூடியோவில் கற்றுத் தரப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.