திருச்சி, பிப்.14 திருமணமான 4வது நாளில் சாலை விபத்ல் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா வலசுப்பட்டிச் சேர்ந்தவர் வீரமருதமுத்து (32). இவர் இன்று கோவில்பட்டிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். மினிக்கியூர் பிரிவு சாலை அருகே சென்றபோது மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற லாரி மோதியதில் அடியில் சிக்கிக் கொண்ட வீரமருதமுத்துவின் கால்கள் துண்டானது. சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வளநாடு போலீசார் விசாரணை. விபத்தில் உயிரிழந்த வீரமருதமுத்துவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.