எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா

0 287
Stalin trichy visit

திருச்சி, பிப். 15  திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாபெரும் இயந்திர கண்காட்சி திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நேற்று  நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்டத் தலைவர் S.மஞ்சுநாத், மாவட்டச் செயலாளர் F.டோமினிக் ராஜ், பொருளாளர் P.தர்மர், துணை செயலாளர் கவுதம் கார்த்திக் மற்றும் செய்தி தொடர்பாளர் M.சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். செந்தாமரை கண்ணன் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து மாவட்ட தலைவர் மஞ்சுநாத் சங்கத்தின் கோரிக்கைகளை முன் வைத்தார். விழாவின் முக்கிய நிகழ்சியான மாபெரும் இயந்திர கண்காட்சியை தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி துவக்கி வைத்தார்.

மேலும் புதிய வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை ஏற்றத்தாளும், காப்பீடு மற்றும் வாகன வரி விலை உயர்வினாலும் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளது, எனவே வாகனங்களின் விலை மற்றும் வாகன வரியை குறைக்க கோரியும் வாடகையை உயர்த்த கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்விழாவில் திருச்சியில் உள்ள வாகன டீலர்கள், நிதி நிறுவனங்கள், உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் மற்றும் கோவை, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எர்த் மூவர்ஸ் சங்கங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியாக சங்கத்தின் துணைத் தலைவர்கள் A. மகேஸ்வரன் மற்றும் V.யுவனராஜ் ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.