வயிற்று வலியால் அவதி : கூலித் தொழிலாளி தற்கொலை

0 244
Stalin trichy visit

திருச்சி, பிப். 15 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய காலணியை சேர்ந்த கூலித் தொழிலாளி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மன உளைச்சலில் நேற்று இரவு 7.30 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இருங்களூர் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் காலனி ஐந்தாவது பிளாட்டைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன்  கார்த்திக் (32). கூலி தொழிலாளியாக வேலை செய்துவருகிறார்.இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடைய மனைவி அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார. கார்த்திக்குக்கு கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக கடுமையான  வயிற்று வலியால் அவதி பட்டு வந்துள்ளார். இதனால் கார்த்திக் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானர். இந்நிலையில் இன்று இரவு 7.30 மணி அளவில் வீட்டின் பாத்ரூமில் இருந்த ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.