தொழிற்சங்கங்களின் பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம்

0 213
Stalin trichy visit

திருச்சி, பிப்.16  ஒன்றிய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்தும், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், ஒன்றிய அரசின் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத போக்கினை கண்டித்தும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னனி, ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., எல்.பி.எஃப்., ஐ.என்.டி.யூ.சி., ஹெச்.எம்.எஸ்.,எம்.எல்.எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசின் மக்கள், தொழிலாளர், விவசாயிகள் விரோத அரசை கண்டித்தும், பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 200 நாள் வேலையும், தினம் ரூ. 600 ரூபாய் கூலி தர வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.