கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

0 241
Stalin trichy visit
திருச்சி, பிப்.16  விலைவாசி வியர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், தொழிலாளர் நல சட்ட தொகுப்பை முதலாளிகளின் நலனுக்காக திருத்தப்பட்டதை திரும்ப பெற வேண்டும்,ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், மின்சார சட்ட திருத்தம் 2022 ஐ திரும்பப் பெற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டும், உரம், பூச்சி மருந்துக்கு மானியம் வழங்கி விலையை குறைக்க வேண்டும், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் வெள்ளி அன்று
தென்னூரில் உள்ள மின்வாரிய  தலைமை பொறியாளர் அலுவலகம் முன் இன்று (பிப்.16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில செயலாளர் சிவசெல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் எஸ்.கே. செல்வராஜ், வட்ட தலைவர் நடராஜன், வட்ட பொருளாளர் பழனியாண்டி, எம்ப்ளாயீஸ் பெடரேஷன் வட்ட தலைவர் சத்திய நாராயணன், கோட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.