திருச்சி என்.ஐ.டி.யில் ‘பிரக்யான்’ தொழில்நுட்ப விழா

0 305
Stalin trichy visit

திருச்சி, பிப். 21  திருச்சி NIT யில் பிரக்யான் தொழில்நுட்ப விழா திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) பிரக்யான் 24 என்ற தலைப்பிலான தொழில் நுட்ப விழா வரும் 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து திருச்சி என்.ஐ.டி. இயக்குநர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

திருச்சி NIT தேசிய அளவில் ஆண்டுதோறும் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் நடத்தப்படும் பிரக்யான் தொழில்நுட்ப விழாவானது வரும் 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு நடைபெறும் என்று தெரிவித்தார்

இதனை எல்அன்ட்டி ஏவுகணைகள் தொழில் பிரிவின் தலைவர் லக்ஷ்மேஷ் தொடங்கி வைக்கிறார். இதில், மருத்துவத்தில் நோபல் பரிசு வென்ற ரிச்சர்ட் ராபர்ட், எப்”ஃ”பிஐ முன்னாள் ஏஜென்ட் ஸ்காட் ஆகன்ட்பவும், தொல்பொருள் ஆய்வாளர் அர்ஷ் அலி, வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சேஷசாயி காந்தம்ராஜு உள்ளிட்ட பலர் பங்கேற்கும் பயிலரங்கம் நடைபெறுகிறது. நிறைவு நாள் விழாவில் சிஎஸ்ஐஆர் இயக்குநர் கலைச்செல்வி பங்கேற்கிறார்.

பிரக்யான் தொழில்நுட்பக் கண்காட்சியில் பயோனிக் க்வாட்ரப்பிள் ரோபோட், மல்டி ஹூமனாய்டு ரோபோ ஷோ, சைகையால் கட்டுப்படுத்தப்படும் ட்ரோன், யுவி ட்ரோன், ரூமி ஹைப்ரீட் ராக்கெட்டுகள், செயற்கைகோள்களும், இஸ்ரோ மற்றும் ஆவடி படைக்கலத் தொழிற்சாலைப் பொருள்களும் காட்சிக்கு வைக்கப்படும்.

இதில், சிமோஸ் அனலாக் சர்க்யூட் டிசைன், செயற்கை நுண்ணறிவு, அப்ஸ்டாக்ஸ், லேட்டன்ட் வைபேஜ், ஆட்டோ டெஸ்க், ஹேக்கிங், சைபர் பாதுகாப்பு போன்ற பயிற்சி பட்டறைகளும், மேலாண்மை, குறியீட்டு முறை, ரோபாட்டிக்ஸ் பிரிவுகளில் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. பிரக்யான் விநாடி வினா, ஸ்டார்ட்அப் அரினா, வாட்டர் ராக்கெட்டரி, பிஸ்ட் ஆப் காட், கேப்ச்சர் தி “ஃ”பிளாக் போன்ற நிகழ்வுகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.