உலக சமூக நீதி நாளை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 497
Stalin trichy visit

திருச்சி, பிப். 21 உலக சமூக நீதி நாளை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள தனியார் மகளிர் கல்லூரியில் சமூக நீதி, மனித உரிமை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகர காவல் துணை ஆணையர் அன்பு தலைமையில் நேற்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு, சமூக நீதி மற்றும் மனித உரிமை என்ற தலைப்பில் மனித உரிமைகள் மற்றும் மாநில மனித உரிமை ஆணையம் தேசிய மனித உரிமை ஆணையம் செயல்பாடுகள் குறித்தும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள், பெண்களுக்கான இலவச தொலைபேசி எண் 181 குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 சைபர் க்ரைம் இலவச தொலைபேசி எண் 1930 குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிறீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதலட்சுமி, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஆணையர் முருகவேல் ஆகியோர் பெண் கல்வியின் அவசியம் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் மற்றும் சட்டம் குறித்தும் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். நிறைவாக காவல் உதவி ஆய்வாளர் சுசீலா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.