பா.ஜ.க. கட்சி கிளை நிர்வாகிகளுக்கு பாராட்டு

0 265
Stalin trichy visit

திருச்சி, பிப். 22  திருச்சி திருவெறும்பூர் வடக்கு மண்டல் நிர்வாகிகள் மற்றும் கிளை தலைவர்கள் திருச்சி பாஜக பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஆர் ஜி ஆனந்த் உடன் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்ற தலைப்பில் வாக்காளர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்தனர்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் திருவெறும்பூர் வடக்கு மண்டல் சேர்ந்த மண்டல் நிர்வாகிகள், 13 கிளை தலைவர்கள், 4 பேர் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், 3 முக்கிய வாக்காளர்களை அவரவர் இல்லத்தில் நேரில் சந்தித்து அவர்களின் கட்சிப்பணியை பாராட்டி, ஆர் ஜி ஆனந்த் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசித்து, தாமரை சுவரோவியம் அவர்களின் பகுதிகளில் அதிகப்படியாக வரைய ஊக்குவித்து, இனிப்புடன் பிரதமரின் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்வில் திருவரம்பூர் வடக்கு மாவட்ட தலைவர்  பி செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.