“கலைஞர் டோல்கேட்” என பெயர் மாற்றக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு
திருச்சி,பிப்.23 திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் மாவட்ட கழக செயலாளரும் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களால் நிறுவப்பெற்ற முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருசிலையை மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சரும் கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தற்பொழுது திருஉருவசிலை அமைந்துள்ள பகுதி டி.வி.எஸ். டோல்கேட் என்று அழைக்கப்பட்டு வரும் ரவுண்டான பகுதியை கலைஞர் டோல்கேட் என மாற்றி அறிவிக்க வேண்டும் என்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் சரவணனிடம் , மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன் கோரிக்கை வைத்தார்..