இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் மாசித் தேர்த்திருவிழா முதல் நாளில்

0 255
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம்சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் மாசித் தேர்த்திருவிழாவின் முதல் நாளில் நேற்றிரவு அம்மன் மரகேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இனாம்சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆதிமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசித் தேர்த்திரு விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த தேர்த் திருவிழாவையொட்டி கடந்த 11 ந்தேதி பூச்சோரிதல் விழா தொடங்கியது.இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மாசித் தேர்த் திருவிழா திங்கட்கிழமை நேற்று தொடங்கியது. இதை யொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மரகேட யத்ததில் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் இரவில் சிம்மம், யானை, ரிஷபம், அன்னம், குதிரை உள் ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் திருஈதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசித் தேரோட்ட விழா வருகின்ற மார்ச் 3-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி, கோவில் பணியாளர்கள், குருக்கள்கள் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.