கல்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா : எம்.எல்.ஏ. கதிவரன் பங்கேற்பு

0 390
Stalin trichy visit

திருச்சி, பிப். 27  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கல்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில்  சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தார்.

மண்ணச்சநல்லூர் அருகே கல்பாளையத்தில் அருள்மிகு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் கலந்து கொள்ள கல்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு எம்.எல்.ஏ கதிரவன் வருகை தந்தார். அப்போது கிராம பெண்கள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு உற்சாகமாக ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் கிராம மக்கள் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு மாலையணிவித்து பொன்னாடை போர்த்தி பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அம்மனை தரிசனம் செய்தார்.

இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர், சமயபுரம் ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் தகவல் தொழில்நுட்ப அணியினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.