புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

0 233
Stalin trichy visit

திருச்சி, பிப். 27  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாடக்குடி ஊராட்சி பள்ளிவிடையில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன்   இன்று காலை 11 மணியளவில் திறந்து வைத்தார்.

லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லால்குடி ஊராட்சி ஒன்றியம், மாடக்குடி ஊராட்சி, பள்ளிவிடையில் தேசிய ஊரகவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது. இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர்  சவுந்தரபாண்டியன் இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி அண்ணாதுரை, ஆணையர் ஆனந்தகுமார், ஒன்றிய பொறியாளர் அழகுமுகில், மாவட்ட கவுன்சிலர் தீபா சுதாகர், ஒன்றிய கவுன்சிலர் இளங்கோவன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.