முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு கண் பரிசோதனை முகாம்
திருச்சி, மார்ச் 1 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. துவரங்குச்சியில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற முகாமில் துவரங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 200 ற்கும் மேற்பட்ட கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கலந்து கொண்டனர். கலைஞர் தமிழ்ச்சங்க நிர்வாகி ராஜா காவேரி மணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். கண்ணாடி அணிய பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு முகாமிலேயே கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டது. மேலும் அறுவைசிகிச்சை செய்யவேண்டியவர்கள் மதுரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இம்முகாமில் துவரங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார் 25 ற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
இதில் மணப்பாறை முன்னாள் நகர துணைச் செயலாளர் ஏ.பி.சரவணன், வெங்கடேசன், சங்கர், பழனி ஆசிரியர், தேவேந்திரன், நல்லம்மாள் அழகர், கருவாடு சலாம், ஜெயசூர்யா, பெட்ரோல் பங்க் சலாம், முத்துராஜா, ராமசாமி கவுண்டர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.