பார்வைத்திறன் புனர்வாழ்வு மையத்தில் உணர்திறன் நிகழ்ச்சி

0 219
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 1  திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூகப்பணித்துறை சார்பில் ” HAPPY LIFE” என்ற தலைப்பில் உணர்திறன் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பார்வைத்திறன் புனர்வாழ்வு மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் ஆலோசகர் சர்மிளா பானு பங்கேற்று, சிறப்புரையும் எதிர்கால வாழ்க்கை வழிகாட்டுதலையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

தொடர்ந்து சிறகுகள் சிறப்பு குழந்தைகள் பெற்றோர் சங்கத்தின் தலைவர் பொன். சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சி அமைப்பாளராக பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர் பிலிப் பிரேம் குமார் செயல்பட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் குழந்தைகள், நிறுவன நிர்வாகிகள் பலரும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.