வயிற்று வலியால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை

0 379
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 2 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாலையூரில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் கடந்த 26ம் தேதி மதியம் 3.30 மணியளவில் விஷம் குடித்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  நேற்று மதியம் 2.30 மணியளவில் உயிரிழந்தார். சிறுகனூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.

மண்ணச்சநல்லூர் அருகே தெற்கு வாலையூர் பகுதியைச் சேர்ந்தவர்  அய்னன்(61). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இதில் மன உளைச்சல் அடைந்த அய்னன் கடந்த 26 ம் தேதி மதியம் 3:30 மணியளவில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்தச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  நேற்று மதியம் 2.30 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.