தீ விபத்தில் சிலிண்டர் வெடித்து 4 பேர் படுகாயம்

0 253
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 4 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நோபில் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிலிருந்து திடீரென கரும் புகை வந்ததால் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராமராஜ் விஜய் கார்த்திக் ஆகிய மூவர் மற்றும் வீட்டின் உரிமையாளர் நோபில் ஆகிய நால்வரும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர் அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளானது இதில் தீயை அணைக்க முயன்ற வீட்டின் உரிமையாளர் நோபில் உட்பட நால்வரும் காயமடைந்தனர். தகவல் இருந்து சம்பவ இடத்திற்குச் சென்ற உப்பிலியபுரம் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

காயமடைந்த நால்வரும் உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் படுகாயம் அடைந்த வீட்டின் உரிமையாளர் நோபில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.வீட்டின் உரிமையாளர் நோபில் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருவதாகவும் அங்கு செய்த சிறிய தவறின் காரணமாக தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ளதாகவும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் கூறப்படுகிறது அவரே வீட்டில் உள்ள துணிகள் மற்றும் கட்டில் மெத்தை ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தியதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர் இதனால் எழுந்த புகையின் காரணமாக தீயை அணைக்கச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர் நால்வரும் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.