திருமணமான இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை

0 337
Stalin trichy visit

 

#news, #TM_News, #Trichymail #trichynews #trichytrends, #trichytrends, Trichy news, TrichyMail, TrichyNews

திருச்சி, மார்ச் 4 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாக் குறிச்சியில் குடும்பப் பிரச்சனை காரணமாக நேற்று இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சில்லகுடியைச் சேர்ந்தவர்  வினோதினி (23) . இவருக்கும் புள்ளம்பாடி அருகே கோண்டாக்குறிச்சி வடக்குத்தெரு சேர்ந்த பாண்டியராஜுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமானது முதல் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலை வந்த்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 20 நாட்களாக பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற வினோதினி மீண்டும் கடந்த 1 ம் தேதி கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென வீட்டில் வினோதினி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளே ஆனதால் லால்குடி ஆர்டிஓ விசாரணை செய்து வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.